சாலையை கடந்து சென்ற 30 யானைகள் நொகனூர் காப்புக்காட்டிற்கு விரட்டப்பட்டன


சாலையை கடந்து சென்ற 30 யானைகள் நொகனூர் காப்புக்காட்டிற்கு விரட்டப்பட்டன
x
தினத்தந்தி 6 March 2018 4:30 AM IST (Updated: 6 March 2018 3:44 AM IST)
t-max-icont-min-icon

ஜவளகிரி அருகே சாலையை கடந்து சென்ற 30 யானைகள், நொகனூர் காப்புகாட்டிற்கு விரட்டப்பட்டன.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரக பகுதியில், 30-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. தாவரக்கரையில் இருந்த யானைகள், கண்டகானப்பள்ளி பகுதியில் தொடர்ந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வந்தன. இந்த நிலையில் நேற்று பாப்பிரெட்டிபாளையம் கிராமம் அருகே, யானைகள் கூட்டமாக சுற்றித் திரிந்தன.

இதைப் பார்த்து அப்பகுதி மக்களும், விவசாயிகளும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர், அங்கு சென்று பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும், யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பாப்பிரெட்டிபாளையம் பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள், ஜவளகிரி சாலையை கடந்து சென்றன. அந்த யானைகள் நொகனூர் காப்புக்காட்டிற்கு விரட்டியடிக்கப்பட்டன. அங்கிருந்து மல்சோனை நோக்கி யானைகள் இடம் பெயர்ந்தன. அவற்றை கர்நாடக மாநிலத்திற்கு விரட்டும் முயற்சியில் தொடர்ந்து வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

Next Story