கார் மோதி பெண் பலி கணவர், குழந்தை படுகாயம்


கார் மோதி பெண் பலி கணவர், குழந்தை படுகாயம்
x
தினத்தந்தி 6 March 2018 3:45 AM IST (Updated: 6 March 2018 3:44 AM IST)
t-max-icont-min-icon

கொண்டாலாம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியானார். இதில் அவரது கணவர், குழந்தை படுகாயம் அடைந்தனர்.

கொண்டலாம்பட்டி,

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார்(வயது25), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சந்தியா(21). இவர்கள் இருவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மிதுன் என்ற கைக்குழந்தை உள்ளது.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள சித்தர்கோவிலில், சிவகுமாரின் உறவினர் ஒருவருடைய திருமணம் நேற்று காலை நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சிவகுமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். காக்காபாளையம் அருகே உள்ள அருவங்காடு பகுதியில் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு கார் அவருடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் சிவகுமார், சந்தியா, மிதுன் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்கள் 3 பேரையும் அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக இறந்தார். கணவர் மற்றும் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். 

Next Story