நடுக்கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்பு
கடலூர் அருகே படகு என்ஜின் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த 7 மீனவர்களை கடலோர காவல் படையினர் மீட்டனர்.
கடலூர்,
கடலூர் தாழங்குடாவில் இருந்து நேற்று அதிகாலை கோவிந்து மகன் மணிவண்ணன் (வயது 34), குமார் மகன் மாதவன் (23), குப்பன் (60), வீரசந்திரன் மகன் சூர்யா (20) ஆகிய 4 பேரும் ஒரு பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அவர்கள் கடலூரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென என்ஜின் பழுதாகி படகு நின்றது. இதில் 4 பேரும் கரைக்கு திரும்ப முடியாமல் கடலில் தத்தளித்தனர். பின்னர் அவர்கள் இது பற்றி கடலூர் மாவட்ட கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தாழங்குடாவில் உள்ள அவர்களின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களை மீட்பதற்காக கடலோர காவல் படை போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுருநாதன், ரமேஷ், ஏட்டு மில்டன் ஆகியோர் தங்களின் நவீன படகில் கடலுக்கு சென்றனர். அங்கு கடலில் தத்தளித்த 4 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
இதற்கிடையில் அவர்களை காப்பாற்றுவதற்காக குமார் (48), கார்த்தி (40), குமார் மகன் மதுபாலன் (21) ஆகிய 3 பேரும் மற்றொரு படகில் சென்றிருந்தனர். அங்கு அவர்கள் சென்ற படகும் என்ஜின் பழுதாகி நின்றது. இதை பார்த்த கடலோர காவல் படையினர் அவர்களையும் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அவர்களின் 2 படகுகளும் பத்திரமாக கரைக்கு கொண்டு வரப்பட்டன.

Related Tags :
Next Story