மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வுரிமையை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மனு கொடுத்தனர்.
நெல்லை.
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கி, பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
குன்னத்துரை சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம் என்பவர் தனது மகள் மாரிச்செல்வியுடன் வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், “எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினேன். அதற்கு இதுவரை வட்டி சேர்த்து 1½ லட்சம் திருப்பி கொடுத்து விட்டேன். ஆனால் அவர், அசல் பணம் தர வேண்டும் என்று மிரட்டி வருகிறார். இது குறித்து பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் கடன் கொடுத்தவர் என்னை தொடர்ந்து மிரட்டுகிறார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
கடையம் அருகே உள்ள தர்மபுரம் ரகுமத் நகரை சேர்ந்த கிராம மக்கள் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் சீராக இல்லை. இது பற்றி பல முறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் நகருக்கு சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
மானூர் பகுதியை சேர்ந்த சங்கர் கொடுத்த மனுவில், “நான் யாரிடமும் வட்டிக்கு பணம் வாங்கவில்லை. ஆனால் பள்ளமடையை சேர்ந்த சிலர் போலி ஆவணம் தயாரித்து நான் பணம் வாங்கியதாக கூறி மிரட்டி வருகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
மேலப்பாளையத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அப்சர் சம்சு (49) என்பவர் கொடுத்த மனுவில், “எனக்கு சொந்தமாக 37 சென்ட் நிலம் மேலப்பாளையம் பகுதியில் உள்ளது. அந்த இடத்தை பிளாட் போடுவதற்காக ஊழியர்களுடன் நின்று கொண்டு இருந்தேன். அப்போது அங்கு வந்த மற்றொரு ரியல் எஸ்டேட் அதிபர், இது என்னுடைய இடம் இங்கு வரக்கூடாது என்று கூறி, என் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டுகிறார். இது குறித்து மேலப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது புகாரின் போரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
லஞ்சம் ஊழலுக்கு எதிரான பேரமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்கு முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில், “பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் லஞ்சம் வாங்கியதாக புகார் கூறப்பட்டு உள்ளது. சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வியனரசு, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் கண்மணிமாவீரன் ஆகியோர் தலைமையில் தனித்தனியாக அந்த கட்சியினர் கொடுத்த மனுக்களில் கூறி இருப்பதாவது:-
அம்பை தாலுகா மணிமுத்தாறு மலைப்பகுதி மாஞ்சோலையில் 1929-ம் ஆண்டு தேயிலை தோட்ட பணிக்காக தமிழ் குடும்பங்கள் அங்கு குடியமர்த்தப்பட்டனர். அந்த பகுதியை மும்பை சேர்ந்த ஒரு தனியார் நிர்வாகம் குத்தகை எடுத்து விவசாயம் செய்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் மாஞ்சோலை தேயிலை தோட்டம் வனத்துறை வசமானது. இதனால் அங்குள்ள தமிழ் குடும்பங்கள் வாழ்வு இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அங்குள்ள தமிழ் மக்களை மலை அடிவாரத்துக்கு கீழ் குடியமர்த்தி அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். கல்வி , குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டு இருந்தது. பின்னர் கூட்டத்தில் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

Related Tags :
Next Story