பிளஸ்–1 தேர்வு இன்று தொடக்கம்: நெல்லை மாவட்டத்தில் 39,459 மாணவ– மாணவிகள் எழுதுகிறார்கள்


பிளஸ்–1 தேர்வு இன்று தொடக்கம்: நெல்லை மாவட்டத்தில் 39,459 மாணவ– மாணவிகள் எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 7 March 2018 2:15 AM IST (Updated: 6 March 2018 5:40 PM IST)
t-max-icont-min-icon

இன்று (புதன்கிழமை) தொடங்கும் பிளஸ்–1 பொதுத்தேர்வை நெல்லை மாவட்டத்தில் 39 ஆயிரத்து 459 மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள்.

நெல்லை,

இன்று (புதன்கிழமை) தொடங்கும் பிளஸ்–1 பொதுத்தேர்வை நெல்லை மாவட்டத்தில் 39 ஆயிரத்து 459 மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள்.

பிளஸ்–1 தேர்வு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (புதன்கிழமை) பிளஸ்–1 பொதுத்தேர்வு தொடங்குகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மாதேவி, தென்காசி ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில், பிளஸ்–1 தேர்வு எழுத, 123 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தில் 42 மையங்களில் 5 ஆயிரத்து 118 மாணவர்களும், 6 ஆயிரத்து 766 மாணவிகளும், ஆக மொத்தம் 11 ஆயிரத்து 884 மாணவ–மாணவிகளும், தென்காசி கல்வி மாவட்டத்தில் 39 மையங்களில் 5 ஆயிரத்து 876 மாணவர்களும், 7 ஆயிரத்து 257 மாணவிகளும், ஆக மொத்தம் 13 ஆயிரத்து 133 மாணவ–மாணவிகளும், நெல்லை கல்வி மாவட்டத்தில் 42 மையங்களில் 6 ஆயிரத்து 380 மாணவர்களும், 8 ஆயிரத்து 62 மாணவிகளும், ஆகமொத்தம் 14 ஆயிரத்து 442 மாணவ–மாணவிகளும் தேர்வு எழுதுகிறார்கள்.

பறக்கும்படை கண்காணிப்பு

நெல்லை மாவட்டத்தில் 315 மேல்நிலை பள்ளிக்கூடங்களில் பயிலும் மொத்தம் 39 ஆயிரத்து 459 பேர் எழுதுகிறார்கள். இதில் 17 ஆயிரத்து 374 மாணவர்களும், 22 ஆயிரத்து 85 மாணவிகளும் அடங்குவர். தேர்வை கண்காணிக்க 8 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

 இத்தேர்வை 145 மாற்றுத்திறனாளிகளும் எழுதுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகானந்தம் செய்து வருகிறார்.

Next Story