மெஞ்ஞானபுரம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை சீராக குடிநீர் வழங்க கோரிக்கை


மெஞ்ஞானபுரம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை சீராக குடிநீர் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 7 March 2018 2:30 AM IST (Updated: 6 March 2018 7:19 PM IST)
t-max-icont-min-icon

சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, மெஞ்ஞானபுரம் அருகே செம்மறிக்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

மெஞ்ஞானபுரம்,

சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, மெஞ்ஞானபுரம் அருகே செம்மறிக்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பொதுமக்கள் முற்றுகை

மெஞ்ஞானபுரத்தை அடுத்த செம்மறிக்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட செம்மறிக்குளம், சத்யா நகர், குமாரலட்சுமிபுரம், அணைத்தலை, பூலிகுடியிருப்பு, கல்விளை உள்ளிட்ட பகுதிகளில் சீராக குடிநீர் வழங்க வேண்டும். பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் உடன்குடி யூனியன் ஆணையாளரிடம் பலமுறை முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கவாஸ்கர் தலைமையில், அப்பகுதி மக்கள் நேற்று காலையில் செம்மறிக்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பேச்சுவார்த்தை

முற்றுகையிட்டவர்களிடம் உடன்குடி யூனியன் ஆணையாளர் சந்தோஷ், மெஞ்ஞானபுரம் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மெஞ்ஞானபுரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குளங்கள் தண்ணீரின்றி வறண்ட நிலையில் உள்ளன. எனவே குளங்களுக்கு தண்ணீர் வழங்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், சடையநேரி கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தெரிவித்தனர்.

Next Story