தென்காசியில் வருகிற 10–ந்தேதி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம்
தென்காசியில் வருகிற 10–ந்தேதி (சனிக்கிழமை) அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
நெல்லை,
தென்காசியில் வருகிற 10–ந்தேதி (சனிக்கிழமை) அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று நெல்லை சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் அலுவலர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
பதிவு முகாம்
தமிழக அரசின் தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் இதர 16 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வாரியத்தில் பதிவு பெறாத கட்டுமானம், ஆட்டோ டிரைவர், தெருவோர வியாபாரிகள், தையல், வீட்டுப்பணி உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் வாரியத்தில் பதிவு செய்யும் வகையில் உறுப்பினர் சேர்க்கை பதிவு முகாம் நடைபெறுகிறது. அதாவது தொழிலாளர் துறை, நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுடன் இணைந்து தென்காசியில் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் வருகிற 10–ந்தேதி (சனிக்கிழமை) புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு பதிவு முகாம் நடைபெறுகிறது.
தேவையான சான்றிதழ்கள்
இந்த வாரியங்களில் பதிவு பெறாத அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு கோரும் விண்ணப்பத்துடன், 2 புகைப்படங்கள், சான்றொப்பமிட்ட ரோஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், வயதை நிரூபிக்க தேவையான ஏதேனும் ஒரு சான்றிதழின் நகல் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் நேரில் வந்து முகாமில் கலந்து கொண்டு உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.
மனுதாரர்கள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் இந்த வாரியத்தில் பதிவு செய்ய முடியாது.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story