புளியம்பட்டி அருகே பிளஸ்–2 தேர்வு எழுத 35 கிலோ மீட்டர் சென்று வரும் மாணவ– மாணவிகள் பஸ் வசதி செய்து தர கோரிக்கை
புளியம்பட்டி அருகே அரசு பொதுத்தேர்வு எழுத மாணவர்கள் 35 கிலோ மீட்டர் சென்று வருகின்றனர். அவர்கள், பஸ் வசதி செய்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓட்டப்பிடாரம்,

பொதுத்தேர்வு
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே சவலாப்பேரி உள்ளது. இங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆலந்தா, சிங்கத்தாகுறிச்சி, உழக்குடி, கோனார்குளம், காசிலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அங்கு பிளஸ்–2 படிக்கும் 60–க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் கடந்து ஓட்டப்பிடாரம் புதியம்புத்தூரில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்துக்கு சென்று வருகிறார்கள். 10–ம் வகுப்பு மாணவர்களும் அரசு பொதுத்தேர்வு எழுத அதே பள்ளிக்கு செல்ல வேண்டியது உள்ளது.
20 கிலோ மீட்டர்
அதேபோன்று புளியம்பட்டி அருகே உள்ள கீழ பூவாணி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு எழுத 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், புளியம்பட்டி அருகே உள்ள காசிலிங்கபுரம் அரசு பள்ளி மாணவர்கள், 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முடிவைத்தானேந்தல் அரசு பள்ளிக்கும் செல்ல வேண்டியுள்ளது.
மாணவர்கள் தேர்வு எழுத அதிக தூரத்துக்கு செல்ல வேண்டியதால் காலை 6 மணிக்கே வீட்டில் இருந்து புறப்பட வேண்டியுள்ளது. போதிய பஸ் வசதி இல்லாததால் பெற்றோர்களே வாகன ஏற்பாடு செய்து, மாணவர்களை தேர்வு எழுதி அனுப்பி வைக்கிறார்கள்.
கோரிக்கை
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், புளியம்பட்டியை சுற்றியுள்ள சவலாப்பேரி, கீழ பூவாணி, காசிலிங்கபுரம், கே.கைலாசபுரம், கொல்லங்கிணறு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ஏதேனும் ஒன்றில், அரசு பொதுத்தேர்வு எழுத மாவட்ட நிர்வாகம் தேர்வு மையத்தை அமைக்க வேண்டும். இந்த கோரிக்கையை ஒவ்வொரு ஆண்டும் அரசு தேர்வு தொடங்கும் போது நாங்கள் அதிகாரிகளிடம் முறையிடுகிறோம். எங்களது கோரிக்கையை யாரும் கண்டுகொள்வது இல்லை. வரக்கூடிய 10–ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முன்னதாக தேர்வு மையம் அமைக்க வேண்டும். தேர்வு மையம் அமைக்கும் வரையில் தற்காலிகமாக மாணவர்கள் தேர்வு எழுத சிரமம் இன்றி சென்று வரும் வகையில் பஸ் வசதி செய்து தர வேண்டும் என்றனர்.

Related Tags :
Next Story