திருச்சுழி பகுதியில் சூரிய மின்சக்தி நிலைய கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும், மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
திருச்சுழி பகுதியில் சூரிய மின்சக்தி நிலைய கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்த நாராயண ஆதிமூலம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திருச்சுழியை அடுத்த சாமிநத்தம் கிராமத்தில் வசித்து வருகிறேன். நெய்வேலி அனல்மின் நிலையம் சார்பில் சூரிய மின்சக்தி தயாரிக்கும் நிலையம் அமைக்க திருச்சுழி, பரட்டநத்தம், தம்மநாயக்கன்பட்டி, பிள்ளையார்நத்தம் ஆகிய 4 கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கி கட்டுமானப்பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பகுதியை அனல்மின் நிலையத்தினர் ஆக்கிரமித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் கிராமத்தினர் முறையிட்டனர். பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனாலும் ஆக்கிரமிப்பை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நிலத்தை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல் இந்த கிராமங்களின் தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்காக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களையும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.
எனவே இந்த 4 கிராமங் களில் நெய்வேலி அனல் மின்நிலையத்தினர் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சூரிய மின்சக்தி தயாரிப்பு பணிகளை தொடர இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், சம்பந்தப்பட்ட பகுதிகளில் சூரிய மின்சக்தி நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை கோர்ட்டின் மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story