மடத்துக்குளத்தில், இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் மேற்கூரையில் துளையிட்டு பணம், கணினி திருட்டு
மடத்துக்குளத்தில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தின் மேற்கூரையில் துளையிட்டு உள்ளே புகுந்து பணம், கணினி மற்றும் டி.வி.யை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.
மடத்துக்குளம்,
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்தவர் மெய்ஞானகுமார். இவர் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் பகுதியில் இருசக்கர வாகன விற்பனையகம் (ஷோரூம்) வைத்து நடத்தி வருகிறார்.
இங்கு நேற்று முன்தினம் அனைத்து வேலைகளும் முடிந்த பின்னர் கடையில் வசூலான பணத்தை அங்குள்ள பீரோவில் வைத்து விட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று காலை கடைக்கு வந்த மெய்ஞானகுமார் கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கு பொருட்கள் சிதறிக்கிடந்தன. அத்துடன் கடையின் மேற்கூரையில் துளையிடப்பட்டும், பீரோ திறந்தும் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் பீரோவை பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் கடையில் இருந்த கணினி, எல்.சி.டி. டி.வி. ஆகியவையும் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக மடத்துக்குளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மடத்துக்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனை நடத்தினார்கள்.
அப்போது நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கடையின் பின்பக்க சுவர் வழியாக மேலே ஏறி கடையின் மேற்பகுதிக்கு சென்று அங்கு சிமெண்டு சீட்டால் (ஆஸ்பெட்டாஸ்) போடப்பட்டிருந்த மேற்கூரையையும், மரத்தாலான (பிளைவுட்) கூரையையும் உடைத்து உள்ளே இறங்கியுள்ள னர். பின்னர் பீரோவை உடைத்து திறந்து அதில் இருந்த பணம் மற்றும் கடையில் இருந்த கணினி, டி.வி. ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர். இந்த துணிகர செயலில் ஒன்றுக்கும் மேற்பட்ட மர்ம ஆசாமிகள் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மடத்துக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார்கள். அத்துடன் திருட்டு நடந்த கடையின் அருகில் உள்ள உணவகம் மற்றும் நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்திலும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும் சூழ்நிலையில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதி வணிக நிறுவனத்தினர் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story