மணல் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி டிரைவர் கைது


மணல் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி டிரைவர் கைது
x
தினத்தந்தி 7 March 2018 4:30 AM IST (Updated: 7 March 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

வடுவூரில் மணல் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

வடுவூர்,

திருவாரூர் மாவட்டம், வடுவூர் அடிச்சேரி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மகன் சந்திரசேகரன் (வயது 27). இவர் நேற்று வடுவூர் கால்நடை மருத்துவமனை அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தஞ்சையில் இருந்து மன்னார்குடி நோக்கி மணல் ஏற்றி வந்த லாரி, சைக்கிள் மீது மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி சந்திரசேகரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்த பொதுமக்கள் லாரியை மடக்கி பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வடுவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சந்திரசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கரூரை சேர்ந்த கண்ணன் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story