குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றம்
சேலையூர் குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டன.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சியில் கிழக்கு தாம்பரம் பகுதியில் குப்பைகள் அகற்றும் பணிகளை தனியார் நிறுவனத்தினர் செய்து வருகின்றனர். சேலையூர் பகுதியில் 19–வது வார்டு கிரசென்ட் அவென்யூ அருகே உள்ள காலி நிலத்தில் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருவதாகவும், அதை அப்புறப்படுத்தாமல் தீ வைத்து எரிப்பதாகவும் தனியார் நிறுவனத்தினர் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
எனவே அப்பகுதியில் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தும் குப்பைகளை அகற்ற தாம்பரம் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்த செய்தி தினத்தந்தி நாளிதழில் வெளியானது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற தாம்பரம் நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி நடவடிக்கை மேற்கொண்டார். சுகாதார அலுவலர் அறிவுசெல்வம், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மேற்பார்வையில் குப்பைகள் அகற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குப்பைகளை அகற்றினர்.
இது குறித்து நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், கிழக்கு தாம்பரம் பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தினர், குப்பைகளை முறையாக அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. குப்பைகளை அகற்றாமல் எரித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Tags :
Next Story