அருப்புக்கோட்டை அருகே வங்கியில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
அருப்புக்கோட்டை அருகே வங்கியை கண்டித்து மூதாட்டி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலையம்பட்டி காமராஜர் நகரை சேர்ந்த முத்து என்பவரது மனைவி முத்துருளி (வயது67). இவர் அங்கு மதுரை ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைக்கு நேற்று சென்றார். வங்கி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக மூதாட்டி முத்துருளி தான் வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண் எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அக்கம்பக்கத்தினரும் வங்கி ஊழியர்களும் சுதாரித்து அவரது முயற்சியை முறியடித்தனர். பின்னர் அவரை முதலுதவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரணை நடத்தினார். அப்போது அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் தெரியவந்தது.
முத்துருளி இந்தவங்கியில் கடந்த 2014-ம் ஆண்டு ரூ.20 ஆயிரம் டெபாசிட் செய்யவந்துள்ளார். ஆனால் அவரது கணக்கில் ரூ.10 ஆயிரம் மட்டுமே வரவு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து 9 மாதத்துக்குபின்னர் தெரிந்து கொண்ட அவர், ரூ.20 ஆயிரம் டெபாசிட் செய்ததாக முறையிட்டுள்ளார். மாவட்ட நிர்வாகத்துக்கும் மனு செய்துள்ளார். தொடர்ந்து அவர் இதற்காக அலைந்து வந்தாலும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. இதனால் வங்கி நிர்வாகத்தை கண்டித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story