டி.வி. பார்த்ததை தாய் கண்டித்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
காட்டுமன்னார்கோவில் அருகே டி.வி. பார்த்ததை தாய் கண்டித்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் ரஞ்சிதா (வயது22). இவருக்கும் உறவினர் ஜெயராஜ் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரஞ்சிதா தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ரஞ்சிதா, வீட்டில் வேலை பார்க்காமல் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். இதை அவரது தாய் சுவிதா கண்டித்ததாக தெரிகிறது.
இதில் மனமுடைந்த ரஞ்சிதா வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவியதில் வலியால் அவர் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரஞ்சிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுவிதா காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story