குளங்களுக்கு வரும் பிரதான வாய்க்கால்களில் உள்ள முறையற்ற குழாய்களை அகற்ற வேண்டும்
குளங்களுக்கு வரும் பிரதான வாய்க்கால்களில் உள்ள முறையற்ற குழாய்களை அகற்றவேண்டும் என்று வட பூதிநத்தம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.
உடுமலை,
பரம்பிக்குளம், ஆழியாறு திட்டம் திருமூர்த்தி அணை பாசனம் தளி வாய்க்கால் வடபூதிநத்தம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க அவசர கூட்டம் உடுமலையை அடுத்துள்ள போடிபட்டி அண்ணாநகரில் உள்ள மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் வெங்கட்ரமணி தலைமை தாங்கினார். எம்.குமார் வரவேற்று பேசினார். பள்ளபாளையம் சுரேஷ், வாளவாடி செல்வராஜ், சுப்பராயலு கவுண்டர், ஆண்டியப்பன், துரைசாமி, ரவிசந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஏழு குளங்கள், வலையபாளையம் குளம் ஆகியவற்றை தூர்வாரி விவசாயிகளின் நீண்டநாள் கனவை நிறைவேற்றிய தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது.
ஆண்டுதோறும் வழங்க வேண்டிய சட்டப்படி உரிமை உள்ள தண்ணீரை தடையின்றி வழங்கி விவசாயம் நடைபெற உதவ வேண்டும்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் சட்டப்படி உள்ள விவசாயிகளின் உரிமைகளை பாராமல் தங்களின் விருப்பப்படி நடைமுறைகளை மாற்றுவதை தவிர்த்து பழைய ஆயக்கட்டிற்கு அரசு வழங்கி உள்ள உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.
குளங்களுக்கு வரும் பிரதான வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்களில் உள்ள முறையற்ற குழாய்களை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2017-18 ம் ஆண்டிற்கான அரசாணை படி தண்ணீரை மே மாதம் 31-ந்தேதி வரை அணைகளில் இருப்பு வைத்து வழங்க வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் ஒன்று கூடி வாழ்வாதாரத்தை காப்பாற்ற அறவழியில் போராடுவது என்றும், அந்த போராட்டத்தில் அனைத்து விவசாயிகளும் குடும்பத்துடன் கலந்து கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story