இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக புகார்: மீன்வளத்துறை அதிகாரிகள், போலீசார் ஆய்வு
இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக வந்த புகார் தொடர்பாக கடல் பகுதியில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆய்வு நடத்தினர்.
மணமேல்குடி,
புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதிகளான கட்டுமாவடி, பொன்னகரம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், ஆர்.புதுப்பட்டினம், மணமேல்குடி, கட்டுமாவடி ஆகிய பகுதிகளில் இருந்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலில் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மீனவர்கள் சிலர் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி கடலில் மீன் பிடித்து வருகின்றனர். இதனால் மீன்வளம் கடலில் குறைகின்றது என புகார் வந்தது.
இதையடுத்து நேற்று மணமேல்குடி மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் பெருமாள், மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் மற்றும் போலீசார் புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் படகில் இரட்டைமடி வலை இருக்கிறதா? தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் பிடிக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்தனர்.
மேலும் வங்காள விரிகுடா கடற்கரை பகுதியில் குறைந்த அளவு மீன்களே வாழ்கின்றன. மேலும் மீன் குஞ்சுகளை, சில மீனவர்கள் இரட்டைமடி வலை பயன்படுத்தி பிடிக்கின்றனர். இதனால் மீன்வளம் குறைகின்றது. எனவே மீனவர்கள் இரட்டைமடி வலை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது எனவும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

Related Tags :
Next Story