பிற மாவட்டங்கள் போல் பட்டாசு கடைகள் உரிமம் புதுப்பிக்கும் நடைமுறையில் மாற்றம் வேண்டும், விற்பனையாளர்கள் மனு
பிறமாவட்டங்கள் போல் பட்டாசு கடைகளுக்கான உரிமம் புதுப்பித்தல் நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில், பட்டாசு விற்பனையாளர்கள் மனு அளித்தனர்.
தேனி,
தேனி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்யும் வணிகர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தேனி மாவட்டத்தில் சுமார் 70 பேர் பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் பெற்று, அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பாதுகாப்பான முறையில் பட்டாசு விற்பனை செய்து வருகிறோம். சில்லறை விற்பனை உரிமத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்து வருகிறோம். இதனால் எங்களுக்கு அசவுகரியங்கள் ஏற்படுகிறது.
புதுப்பித்தல் தாமதப்படுத்தப்படும் போது, சரக்கு கொள்முதல் செய்ய தாமதம் ஏற்பட்டு, விலை கடுமையாக உயர்ந்து விடுகிறது. இதனால், நஷ்டம் அடைகிறோம். தமிழகத்தில், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் உரிமம் புதுப்பித்து வழங்கப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் உரிமம் புதுப்பித்து வழங்கப்படுவதால், எங்களோடு சேர்த்து அதிகாரிகளும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, எங்களின் உரிமத்தை 3 ஆண்டுகளுக்கோ, 5 ஆண்டுகளுக்கோ புதுப்பித்து வழங்க வேண்டும். எனவே, பிற மாவட்டங்கள் போல் உரிமம் புதுப்பித்தல் நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story