முதுநிலை மருத்துவ படிப்பு: சென்டாக் கலந்தாய்வு தொடர்பாக கவர்னர் கிரண்பெடி ஆலோசனை
முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை சென்டாக் கலந்தாய்வு தொடர்பாக அதிகாரிகளுடன் கவர்னர் கிரண்பெடி ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி,
புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்டாக் கலந்தாய்வு தொடர்பான தேதியை அறிவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் சென்டாக் கலந்தாய்வு தொடர்பாக அதிகாரிகளுடன் கவர்னர் கிரண்பெடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், அரசு செயலாளர்கள் அன்பரசு, கந்தவேலு, தேவநீதிதாஸ், சென்டாக் கன்வீனர் ருத்ரகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது சென்டாக் கலந்தாய்வினை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கலந்தாய்வு தொடர்பான அனைத்து விவரங்களையும் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு முறையாக தெரிவிக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தினார்.
முதுநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (புதன்கிழமை) வெளியாகிறது.

Related Tags :
Next Story