பிளஸ்–1 தேர்வு தொடங்கியது: 39,459 மாணவ– மாணவிகள் எழுதினர்
நெல்லை மாவட்டத்தில், நேற்று தொடங்கிய பிளஸ்–1 அரசு பொதுத்தேர்வை 39 ஆயிரத்து 459 மாணவ–மாணவிகள் எழுதினார்கள்.
நெல்லை,

பிளஸ்–1 தேர்வு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–1 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த ஆண்டு முதல் இந்த தேர்வு பொதுதேர்வாக மாற்றப்பட்டது. முதல் நாளான நேற்று தமிழ் முதல்தாள் தேர்வு நடந்தது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மாதேவி, தென்காசி ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் பிளஸ்–1 தேர்வு எழுத 123 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 884 மாணவ–மாணவிகளும், தென்காசி கல்வி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 133 மாணவ–மாணவிகளும், நெல்லை கல்வி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 442 மாணவ–மாணவிகளும் தேர்வு எழுதினர். ஆக மொத்தமாக, மாவட்டத்தில் 39 ஆயிரத்து 459 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 17 ஆயிரத்து 374 மாணவர்களும், 22 ஆயிரத்து 85 மாணவிகளும் அடங்குவர். 145 மாற்றுத்திறனாளி மாணவ– மாணவிகளும் தேர்வு எழுதினார்கள். இவர்களுக்கு உதவ ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
சிறைக்கைதிகள்
பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 24 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினார்கள். பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருக்கும் 7 கைதிகள், சென்னை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு தேர்வு எழுதினார்கள்.
தேர்வை கண்காணிக்க 123 முதன்மை கண்காணிப்பாளர்கள், 20 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 123 துறை அலுவலர்கள், 2 ஆயிரத்து 265 அறை கண்காணிப்பாளர்கள், 232 நிலையான பறக்கும்படை உறுப்பினர்கள், கல்வித்துறை ஆய்வு அலுவலர்கள் தலைமையில் 8 பறக்கும் படை குழுக்கள், 25 வழித்தட அலுவலர்கள் தேர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை சேவியர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) முத்துராமலிங்கம் ஆய்வு செய்தார். அப்போது முதன்மை கல்வி அலுவலர் முருகானந்தம், நாட்டுநலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் தேவபிச்சை மற்றும் கல்வி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடந்தது. தேர்வு எழுதி விட்டு மாணவ–மாணவிகள் உற்சாகமாக வெளியே வந்தனர்.
எளிதாக இருந்தது
தேர்வு பற்றி பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சயிலா, ஜோதி ஆகியோர் கூறும் போது, “தமிழ் முதல்தாள் எளிதாக இருந்தது. நாங்கள் படித்த பாடங்களில் இருந்து கேள்வி வந்து இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது“ என்றனர்.
தேர்வு மையங்களுக்கு குடிநீர், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story