பிளஸ்–1 தேர்வு தொடங்கியது 21,748 மாணவ–மாணவிகள் எழுதினர்


பிளஸ்–1 தேர்வு தொடங்கியது 21,748 மாணவ–மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 8 March 2018 2:30 AM IST (Updated: 7 March 2018 7:24 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்–1 தேர்வு நேற்று தொடங்கியது. 21 ஆயிரத்து 748 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்–1 தேர்வு நேற்று தொடங்கியது. 21 ஆயிரத்து 748 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர்.

பிளஸ்–1 தேர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்–1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மாவட்டம் முழுவதும் உள்ள 192 பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்து 832 மாணவர்கள், 11 ஆயிரத்து 916 மாணவிகள் ஆக மொத்தம் 21 ஆயிரத்து 748 பேர் தேர்வு எழுதினர்.

இதில் தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 100 பேரும், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 648 பேரும் தேர்வு எழுதினர்.

அதிகாரிகள் கண்காணிப்பு

இதற்காக தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 48 தேர்வு மையங்களும், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 26 தேர்வு மையங்களும் ஆக மொத்தம் 74 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வை கண்காணிக்க 74 முதன்மை கண்காணிப்பாளர்கள், 17 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 74 துறை அலுவலர்கள், 19 கூடுதல் துறை அலுவலர்கள், 160 பறக்கும் படை உறுப்பினர்கள், 1,197 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. மாணவ–மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர். இந்த தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் தலைமையில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

Next Story