குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மறுத்த மாமியாரை வெட்டிய மருமகன் கைது
குடும்பம் நடத்த மனைவியை தன்னுடன் அனுப்ப மறுத்த மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.
பாவூர்சத்திரம்,
குடும்பம் நடத்த மனைவியை தன்னுடன் அனுப்ப மறுத்த மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.
குடும்ப பிரச்சினை
பாவூர்சத்திரத்தை சேர்ந்த மாரிமுத்து மனைவி முப்புலிபாப்பா(வயது 40). இவர் அங்குள்ள தினசரி சந்தையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகள் மகேஷ்வரியை 1½ ஆண்டுகளுக்கு முன்பு ஆலங்குளம் அருகே உள்ள நல்லூரை சேர்ந்த சண்முகம் மகன் சிவா(23) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
திருமணம் முடிந்த சில மாதங்களில் இருந்தே கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கர்ப்பிணியாக இருந்த மகேஷ்வரி, கணவரை பிரிந்த தாய் வீட்டுக்கு வந்தார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையுடன் அவர் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று மனைவியையும், குழந்தையையும் அழைத்து செல்ல மாமியார் வீட்டுக்கு சிவா வந்தார்.
மாமியாருக்கு வெட்டு
தன்னுடன் குடும்பம் நடத்த மனைவியையும், குழந்தையையும் அனுப்பி வைக்குமாறு சிவா கேட்டார். இதற்கு முப்புலிபாப்பா மறுத்தார். இதனால், இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவா, தனது கையில் வைத்திருந்த அரிவாளால் மாமியாரை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் தலை மற்றும் கையில் வெட்டுக்காயங்களுடன் அலறினார். உடனே, சிவா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று அவரை மீட்டு, தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர்.

Related Tags :
Next Story