காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் அய்யாக்கண்ணு பேட்டி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழக எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.
கோவில்பட்டி,

துண்டுபிரசுரம் வினியோகம்
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு அரசு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் அடங்கிய குழுவினர் கடந்த 1–ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்னை கோட்டை நோக்கி விழிப்புணர்வு பிரசார பயணத்தை தொடங்கினர்.
நேற்று காலையில் கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு வந்த விவசாயிகள் குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம், மெயின் ரோடு உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு கோரிக்கை விளக்க துண்டுபிரசுரங்களை விவசாயிகள் வினியோகம் செய்தனர்.
தொடர்ந்து அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழக எம்.பி.க்கள் பதவி விலக...
கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, மத்திய பா.ஜ.க. அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயக்கம் காட்டி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லையெனில், பிரதமர் நரேந்திரமோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவதோடு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காத கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை கலைக்க கோருவோம். மேலும் பிரதமரின் வீட்டின் முன்பும் போராட்டம் நடத்துவோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழக எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும்.
மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலம் விவசாயம் செய்வதால் அதனை சாப்பிடும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பை இழக்கும் அபாயமும் உள்ளது. விவசாயிகளுக்கு தண்ணீர் தராமலும், விளைபொருட்களுக்கு உரிய விலை தராமலும், விவசாயத்தை அழித்து விட்டு, தமிழகத்தில் தடையின்றி பெட்ரோலிய பொருட்களை எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. விமான நிலைய விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது.
இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.
பின்னர் அவரது தலைமையில் விவசாய குழுவினர், கயத்தாறு பழைய பஸ்நிறுத்தம் பகுதியில் பொதுமக்களுக்கு கோரிக்கை விளக்க துண்டுபிரசுரம் வினியோகம் செய்தனர். தொடர்ந்து அவர்கள், கடம்பூர் வழியாக தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றனர்.

Related Tags :
Next Story