பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடக்கம்: தமிழ் முதல் தாளினை 8,478 மாணவ- மாணவிகள் எழுதினர்


பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடக்கம்: தமிழ் முதல் தாளினை 8,478 மாணவ- மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 8 March 2018 4:15 AM IST (Updated: 8 March 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. 27 மையங்களில் நடந்த தமிழ் முதல் தாள் தேர்வினை 8,478 மாணவ-மாணவிகள் எழுதினர்.

பெரம்பலூர்,

தமிழக மாணவ-மாணவிகளின் கல்வித்திறனை மேம் படுத்தும் பொருட்டு முதன் முறையாக பிளஸ்-1 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில், 27 தேர்வு மையங்களில் தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. காலை முதலே ஒரு வித எதிர்பார்ப்புடன் தேர்வு மையத்திற்கு வந்த மாணவ, மாணவிகள் கடைசியாக ஒரு முறை படித்ததை திருப்பி பார்த்தனர். சில மாணவ-மாணவிகள் தங்களது ஆசிரியரிடமும், பெற்றோரிடமும் ஆசி பெற்று தேர்வு எழுத சென்றதை பார்க்க முடிந்தது. சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தின் போது, காப்பி அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

சரியாக 10.15 மணியளவில் மணிசத்தம் ஒலித்ததும் தமிழ் முதல் தாள் தேர்வினை பிளஸ்-1 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் எழுத தொடங்கினர். வெளி ஆட்கள் யாரும் தேர்வு மையத்திற்குள் நுழைந்து விடாத வகையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில், 4,266 மாணவர்கள், 4,321 மாணவிகள் என 8,587 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் 8,478 பேர் தமிழ் முதல் தாள் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 109 பேர் தேர்வுக்கு வரவில்லை. தனித்தேர்வர்களில் 6 பேர் தேர்வு எழுதினர். இதைத்தவிர மற்றமொழி பாடங்களை தேர்ந்தெடுத்த 10 மாணவ, மாணவிகள் தேர் வெழுதினர். தேர்வு மையங் களில் குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட கலெக்டர் சாந்தா வழிகாட்டுதலின் பேரில் செய்யப்பட் டிருந்தன.

தேர்வின் போது துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள்-வினாத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள் மாறாட்டம் செய்தல், காப்பி அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களை கண்டறி வதற்காக 71 பறக்கும் படை யினர் நியமிக்கப்பட்டு மாவட்டம் முழுவதுமுள்ள தேர்வு மையங்களை சுற்றி சுற்றி வந்து கண்காணித்தனர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் மார்க்ரெட் எமிலி மற்றும் மாநில பறக்கும் படையினர் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தேர்வறையில் மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து சந்தேகத்திற்குரியவர்களை சோதனையிட்டனர். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர் களுக்கு தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏதும் உள்ளதா? என கேட்டு தெரிந்து கொண்டனர். எனினும் தமிழ் முதல் தாள் தேர்வு என்பதால் மாணவர்கள் யாரும் காப்பி அடித்ததாக பிடிபடவில்லை.

இதற்கிடையே பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருள்மொழிதேவி உள்பட கல்வி அதிகாரிகள் அம்மாபாளையம், நக்கசேலம், செட்டிகுளம், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளை பார்வையிட்டனர். அப்போது தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கி விட்டதாக என்பது குறித்தும், தேர்வறையில் செல்போன் பயன்பாட்டில் இருக்கிறதா? என்பது குறித்தும், விடைத்தாள்-வினாத்தாள் வழங்குவதில் குளறுபடி ஏதும் இருக்கின்றனவா? என பல்வேறு விதமாக ஆய்வு செய்து கண்காணிப்பாளர்களிடம் தகவல்களை கேட்டறிந்தனர்.

12.45 மணிக்கு தேர்வு முடிந்ததும் மாணவர்கள் விடைத்தாளினை தேர்வறை கண் காணிப்பாளரிடம் ஒப் படைத்து விட்டு வெளியே வந்தனர். பின்னர் முதன் முறையாக பிளஸ்-1 அரசுபொதுத்தேர்வு எழுதிய மாணவர்களை தமிழாசிரியர்கள் சந்தித்து வினாக்கள் எப்படி இருந்தது? என்பது பற்றியும், சந்தேக வினாக்களுக்கான விடை குறித்தும்? கலந் தாலோசித்து தெளிவுபடுத்தினர். பெரும்பாலான மாணவர்கள் தேர்வு எளிமையாக இருந்ததாகவே தெரிவித்தனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டும் தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அவர்களுக்கு தேர்வு எழுத ஆசிரியர்கள் உதவி செய்தனர். இன்று (வியாழக்கிழமை) தமிழ் 2-ம் தாளுக்கான தேர்வு பிளஸ்-1 மாணவர்களுக்கு நடக்கிறது. 

Next Story