அரியலூரில் பிளஸ்-1 பொதுத்தேர்வு: 8 ஆயிரத்து 494 மாணவ-மாணவிகள் எழுதினர்
அரியலூரில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 8 ஆயிரத்து 494 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் 136 பேர் தேர்வு எழுத வரவில்லை.
அரியலூர்,
தமிழக மாணவ-மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்தும் பொருட்டு முதன் முறையாக பிளஸ்-1 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. அரியலூர் மாவட்டத்தில், 30 தேர்வு மையங்களில் தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. காலையில் தேர்வு மையத்திற்கு வந்த மாணவ, மாணவிகள் கடைசியாக ஒரு முறை படித்ததை திருப்பி பார்த்தனர். சில மாணவ-மாணவிகள் தங்களது ஆசிரியரிடமும், பெற்றோரிடமும் ஆசி பெற்றனர். சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தின் போது, காப்பி அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
சரியாக 10.15 மணியளவில் மணிசத்தம் ஒலித்ததும் தமிழ் முதல் தாள் தேர்வினை பிளஸ்-1 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் எழுத தொடங்கினர். வெளி ஆட்கள் யாரும் தேர்வு மையத்திற்குள் நுழைந்து விடாத வகையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அரிய லூர் மாவட்டத்தில், 3,714 மாணவர்கள், 4,780 மாணவிகள் என மொத்தம் 8,494 பேர் தமிழ் முதல் தாள் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 136 பேர் தேர்வுக்கு வரவில்லை. தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, கழிவறைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
தேர்வின் போது துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள்-வினாத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள் மாறாட்டம் செய்தல், காப்பி அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களை கண்டறிவதற்காக 70 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு மாவட்டம் முழுவதுள்ள தேர்வு மையங்களை சுற்றி வந்து கண்காணித்தனர். இதற்கிடையே அரியலூர் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி உள்பட கல்வி அதிகாரிகள் அரியலூர் நிர்மலா பள்ளியை பார்வையிட்டனர்.
அப்போது தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கி விட்டதா என்பது குறித்தும், தேர்வறையில் செல்போன் பயன்பாட்டில் இருக்கிறதா? என்பது குறித்தும், விடைத்தாள்-வினாத்தாள் வழங்குவதில் குளறுபடி ஏதும் இருக்கின்றனவா? என பல்வேறு விதமாக ஆய்வு செய்து கண்காணிப்பாளர்களிடம் தகவல்களை கேட்டறிந்தனர். 12.45 மணிக்கு தேர்வு முடிந்ததும் மாணவர்கள் விடைத்தாளினை தேர்வறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு வெளியே வந்தனர். பின்னர் முதன் முறையாக பிளஸ்-1 அரசுபொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது புத்தகங்களை எடுத்து விடைகள் சரியாக எழுதியுள்ளோமா என்று பார்த்தனர். மேலும் மாணவர்களுடன் கலந்தாலோசித்து தெளிவுபடுத்தினர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டும் தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அவர்களுக்கு தேர்வு எழுத ஆசிரியர்கள் உதவி செய்தனர். இன்று (வியாழக்கிழமை) தமிழ் 2-ம் தாளுக்கான தேர்வு பிளஸ்-1 மாணவர்களுக்கு நடக்கிறது.

Related Tags :
Next Story