பெரியார் சிலையை உடைப்போம் என்று கூறிய கருத்துக்கு எதிர்ப்பு: மாவட்டத்தில் எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்து போராட்டம்
பெரியார் சிலையை உடைப்போம் என்று கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்டத்தில் எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவின், தனது முகநூல் பதிவில் தந்தை பெரியாரின் சிலையை உடைப்போம் என்று கூறியுள்ளார். இந்த கருத்து தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் எச்.ராஜாவை கண்டித்து அவரது உருவபொம்மையை தீ வைத்து எரித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரத்தில் நேற்று காலை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விழுப்புரம் காந்தி சிலை அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காமராஜர் வீதியில் உள்ள பெரியார் சிலை அருகில் வந்தடைந்தனர்.
தொடர்ந்து, அங்கு எச்.ராஜாவை கண்டித்தும், அவரை உடனே கைது செய்யக்கோரியும் கோஷம் எழுப்பியவாறு எச்.ராஜாவின் உருவபொம்மையை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் விழுப்புரம் பெரியார் சிலை அருகில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு எச்.ராஜாவை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு சென்றனர். இந்த ஊர்வலம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் முடிவடைந்தது.
இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் புகழேந்தி, துணை செயலாளர்கள் ஜெயச்சந்திரன், முத்தையன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், நகர தலைவர் சக்கரை, பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, கல்பட்டு ராஜா, தெய்வசிகாமணி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் இளங்கோ, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சித்திக்அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் தியாகதுருகம் பஸ் நிறுத்தம் அருகில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் மவுண்ட்பார்க் பள்ளி தாளாளரும் தி.மு.க. பிரமுகருமான மணிமாறன், வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலையிலும், திருக்கோவிலூர் ஒன்றிய அலுவலகம் அருகில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையிலும் ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் முன்னிலையிலும், கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமையிலும், உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் அருகில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் தலைமையிலும் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜவேலு, நகர செயலாளர் டேனியல் ராஜ் ஆகியோர் முன்னிலையிலும், கெடிலத்தில் திருநாவலூர் ஒன்றிய செயலாளர் வசந்தவேல் தலைமையிலும், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் வானூர் ஒன்றிய செயலாளர் முரளி தலைமையிலும், திருக்கோவிலூர் கீழையூரில் ஒன்றிய செயலாளர் தங்கம் தலைமையிலும், மரக்காணத்தில் நகர செயலாளர் ரவிக்குமார் தலைமையிலும் எச்.ராஜாவின் உருவபொம்மையை தீ வைத்து எரித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திண்டிவனம் காந்தி சிலை அருகில் திராவிடர் கழக தலைவர் தாஸ் தலைமையிலும், கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சுப்புராயன் தலைமையிலும் அந்த அமைப்பினர் எச்.ராஜாவின் உருவபொம்மையை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதவிர மக்கள் அதிகாரம் அமைப்பினர் அதன் மண்டல ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் தலைமையில் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியார் சிலை அருகில் வந்தனர். தொடர்ந்து, அங்கு எச்.ராஜாவை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு அவரது உருவ படத்தை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story