பா.ஜனதா கொடிக்கம்பம் உடைப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சியினர் சாலை மறியல் போராட்டம்


பா.ஜனதா கொடிக்கம்பம் உடைப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சியினர் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 8 March 2018 4:30 AM IST (Updated: 8 March 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாட்டில் பா.ஜனதா கொடிக்கம்பம் உடைக்கப்பட்டது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரத்தநாடு,


தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பஸ்நிலையம் அருகே உள்ள பா.ஜனதா கட்சியின் கொடிக்கம்பத்தை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த பா.ஜனதா கட்சியினர் கொடிக்கம்பத்தை உடைத்து சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கர்ணன் தலைமை தாங்கினார். ஒரத்தநாடு ஒன்றிய தலைவர் மாதவன் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


இதனை தொடர்ந்து கொடிக்கம்பம் உடைக்கப்பட்டது குறித்து பா.ஜனதா கட்சியினர் ஒரத்தநாடு போலீசில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் முகநூல் பக்கத்தில் பெரியார் சிலை குறித்து பதிவான கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பா.ஜனதா கொடிக்கம்பம் உடைக்கப்பட்ட சம்பவம் ஒரத்தநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story