ஈரோட்டில், திராவிட விடுதலை கழகத்தினர் 19 பேர் கைது


ஈரோட்டில், திராவிட விடுதலை கழகத்தினர் 19 பேர் கைது
x
தினத்தந்தி 8 March 2018 3:00 AM IST (Updated: 8 March 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில், போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட விடுதலை கழகத்தினர் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு,

திராவிட விடுதலை கழகம் சார்பில், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் பூநூல், குடுமி அறுக்கும் போராட்டம் நேற்று மாலை நடந்தது. போராட்டத்துக்கு மாநில அமைப்பு செயலாளர் ரத்தினசாமி தலைமை தாங்கினார்.

தலைமை நிலைய செயலாளர் குமரன், செயற்குழு உறுப்பினர்கள் அய்யனார், உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இதில் கலந்து கொண்டவர்கள், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு காரணமாக இருந்த எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் அவர்களை கைது செய்தனர். மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story