சிரியா மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் சிரியா மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி,
சிரியாவில் குழந்தைகள், பெண்கள் என்று அப்பாவி பொதுமக்களை கொலை செய்து வரும் அமெரிக்க, ரஷியா ராணுவத்தை வெளியேற்றக்கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் நேருவீதி - காந்தி வீதி சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் விடுதலை கழக தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். தந்தைபிரியன், சிவானந்தம், விஜயசங்கர், சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகநாதன், தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீர.மோகன், தமிழர் தேசிய முன்னணி தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்க அழகிரி, ராவணன் படிப்பக அபிமன்னன், புதுச்சேரி தன்னுரிமை கழக சடகோபன், கிராமப்புற மக்கள் இயக்க சந்திரசேகரன், தமிழர் களம் அழகர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர்படை பாவாடைராயன், செம்படுகை நன்னீரக ராமமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று கூறிய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story