தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
மகளிர் தின விழா
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசு பெண் ஊழியர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி, போட்டிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பெண்மையை போற்றுவோம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி, பூ கட்டுதல், நெருப்பு இன்றி சமையல், ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட 23 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் (பயிற்சி) சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நீதிபதி சாருஹாசினி
தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. உதவி பேராசிரியை செல்வலதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் வாசுகி முன்னிலை வகித்தார். தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாராணி, வக்கீல் நர்மதாதேவி ஆகியோர் மகளிர் தினம் குறித்து பேசினர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட நீதிபதி சாருஹாசினி, மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் சுபத்திரா, 3–வது குற்றவியல் நடுவர் ரோஸ்கலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி சாருஹாசினி பேசும்போது, ‘பிறப்பு முதல் இறப்பு வரை பெண்களின் பாதுகாப்புக்காக பல சட்டங்கள் உள்ளன. ஆனால் அந்த சட்டங்களை பெரும்பாலானோர் தெரிந்து கொள்ளாமல் உள்ளனர். பெண்கள் தங்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டு உள்ள சட்டங்களை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு மாணவ பருவத்திலேயே பாட புத்தகங்களுடன் சட்ட புத்தகங்களையும் சேர்த்து படிக்க வேண்டும். அனைவரும் எதிர்காலத்தில் உயர்ந்த பதவியை அடைய வேண்டும்‘ என்றார். முடிவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் நன்றி கூறினார்.
அரசு வட்டார நூலகம்
கோவில்பட்டி அரசு வட்டார நூலகத்தில் நடந்த மகளிர் தின விழாவுக்கு கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாபாய் தலைமை தாங்கினார். அவ்வையார் உருவப்படத்துக்கு மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பெண்களுக்கு எதிரான அனைத்து செயல்களையும் தடுத்து நிறுத்துவோம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். நாடார் நடுநிலைப்பள்ளி மாணவிகள் 85 பேரும், எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 40 பேரும் நூலக உறுப்பினர்களாக சேர்ந்தனர். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை அனிதா, ஐ.சி.எம். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராதா ஆகியோர் நூலக புரவலர்களாக இணைந்தனர். மாணவிகள் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி விளையாடினர்.
போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சவரியம்மாள் தேவி, ஆசிரியர்கள் ராஜசேகர், விநாயகசுந்தரி, சீனியம்மாள், பாலசரசுவதி, நூலகர்கள் அழகர்சாமி, கலைச்செல்வி, பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நூலக பணியாளர் செல்வராணி நன்றி கூறினார்.
சட்ட விழிப்புணர்வு முகாம்
எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தினத்தை முன்னிட்டு, தாலுகா சட்ட பணிகள் குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. கோவில்பட்டி 2–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வீரணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பேபி லதா வரவேற்று பேசினார். அரசு வக்கீல் சந்திரசேகர், வக்கீல்கள் ரமணன், முத்துகுமார், ராமச்சந்திரன், ஜெயஸ்ரீ, மகேந்திரகுமார், கார்த்திபராஜ், கோபி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மரிய சகாய அன்டனி ஆகியோர் பேசினர். பெண்களின் நலன் காக்கும் பல்வேறு சட்டங்கள், பெண்களுக்கான உரிமைகள், வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கி கூறினர். கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story