மாவட்ட செய்திகள்

தரகுமண்டி வர்த்தகர் சங்க வணிக வளாகம் + "||" + Tarakumanti Trader Association Business Campus

தரகுமண்டி வர்த்தகர் சங்க வணிக வளாகம்

தரகுமண்டி வர்த்தகர் சங்க வணிக வளாகம்
திண்டுக்கல்லில் தரகுமண்டி வர்த்தகர் சங்க வணிக வளாகம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார்.
திண்டுக்கல்,

திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டியில், மின்வாரிய அலுவலகம் அருகே திண்டுக்கல் தரகுமண்டி வர்த்தகர் சங்க வணிக வளாகம் நிறுவப்பட்டு உள்ளது. சுமார் 7½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வணிக வளாகத்தில் மொத்தம் 130 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வணிக வளாகத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு சங்க தலைவர் பி.குமாரசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் டி.ஜி.வினய் முன்னிலை வகித்தார். முன்னதாக சங்க பொருளாளர் டி.நாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.


விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு வணிக வளாகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார். இந்த வணிக வளாகத்தின் அருகில் வளம் வர்த்தக விநாயகர் கோவில் உள்ளது. முன்னதாக இந்த கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதற்கு தொழில் அதிபர் எம்.வி.எம்.செல்லமுத்தையா முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் பரமசிவம் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் மருதராஜ், தமிழ்நாடு தொழில் வர்த்தகர் சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல், திண்டுக்கல் வர்த்தகர் சங்க தலைவர் எஸ்.கே.சி.குப்புசாமி, துணைத் தலைவர்கள் ஜி.சுந்தரராஜன், கே.ஏ.ஆர். மைதீன், தொழில்அதிபர் ரெத்தினம், முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், நகரசபை முன்னாள் தலைவர் பசீர்அகமது, திண்டுக்கல் தரகுமண்டி வர்த்தகர் சங்க நிர்வாகி பால்ராஜ் உள்பட முக்கிய பிரமுகர்கள், வணிகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் தமிழ்செல்வன் நன்றி கூறினார்.