மாவட்ட செய்திகள்

கட்டிட மேஸ்திரி மனைவி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + The wife of the building maestro committed suicide

கட்டிட மேஸ்திரி மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

கட்டிட மேஸ்திரி மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
வெண்ணந்தூர் அருகே கட்டிட மேஸ்திரியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெண்ணந்தூர்,


வெண்ணந்தூரை அடுத்து உள்ள மின்னக்கல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொன்னாங்கரடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி செல்வி (24). இவர் சித்தாள் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.


இவர்களுக்கு தீபன்ராஜ் (6), வர்சினி (4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ரமேஷ் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியின் மீது சந்தேகப்பட்டு, அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததோடு, அவரை அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது.


இதில் மனம் உடைந்து காணப்பட்ட செல்வி நேற்று முன்தினம் இரவு அவருடைய கணவர் வெளியில் சென்ற பிறகு வீட்டின் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் தகவல் அறிந்து அக்கம், பக்கத்தினர் வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து செல்வியின் தாய் பாப்பாயி கொடுத்த புகாரின்பேரில், வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.