மாவட்ட செய்திகள்

செய்யாறு அருகே மோட்டார்சைக்கிள்கள் திருடிய 2 சிறுவர்கள் கைது + "||" + Two boys arrested for stealing motorcyclists near Kodar

செய்யாறு அருகே மோட்டார்சைக்கிள்கள் திருடிய 2 சிறுவர்கள் கைது

செய்யாறு அருகே மோட்டார்சைக்கிள்கள் திருடிய 2 சிறுவர்கள் கைது
செய்யாறு அருகே மோட்டார்சைக்கிள்கள் திருடிய 2 சிறுவர்கள் கைது கடலூர் சிறுவர் சீர்த்திருத்தபள்ளியில் அடைப்பு.
செய்யாறு,

செய்யாறு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு குணசேகரன் உத்தரவின்பேரில், பிரம்மதேசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாக்கியராஜ், கோதண்டபாணி மற்றும் போலீசார் வெம்பாக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.


விசாரணையில் காஞ்சீபுரம் மாவட்டம், சாலபோகம் கிராமத்தை சேர்ந்த 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் என்பதும், வெம்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடியதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்களை மீட்டனர்.

பின்னர் போலீசார், அவர்கள் 2 பேரையும் கடலூர் சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.