மாவட்ட செய்திகள்

குமாரபுரம் அருகே கார் மோதி பட்டதாரி வாலிபர் பலி + "||" + A car criminus kills near Kumarapuram

குமாரபுரம் அருகே கார் மோதி பட்டதாரி வாலிபர் பலி

குமாரபுரம் அருகே கார் மோதி பட்டதாரி வாலிபர் பலி
குமாரபுரம் அருகே கார் மோதி பட்டதாரி வாலிபர் பலியானார்.
குமாரபுரம்,

குமாரபுரம் அருகே உள்ள கொற்றிக்கோடு பாஞ்சிவிளை பகுதியை சேர்ந்தவர் சாமுவேல், விவசாயி. இவருடைய மகன் ஜோஸ்லின்(வயது 32). எம்.பி.ஏ. பட்டதாரி. இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இவர், நேற்று மதியம் வீட்டில் இருந்து குமாரபுரத்தில் உள்ள ஒரு மருந்துக்கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது குமாரபுரத்தில் இருந்து கொற்றிக்கோடு நோக்கி வேகமாக வந்த கார் திடீரென்று ஜோஸ்லின் மீது மோதியது.


சாவு

இதில் அவர், கார் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட டிரைவர், காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

உடனே அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்த ஜோஸ்லினை மீட்டு சிகிச்சைக்காக அழகியமண்டபத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது தந்தை சாமுவேல் கொற்றிக்கோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான திருவனந்தபுரம் நாளாம்சிறையை சேர்ந்த அனில்குமாரை(47) தேடிவருகிறார்கள்.