நவநிர்மாண் சேனா கட்சியினர் 3 பேர் கைது


நவநிர்மாண் சேனா கட்சியினர் 3 பேர் கைது
x
தினத்தந்தி 9 March 2018 3:37 AM IST (Updated: 9 March 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

டாக்சி டிரைவரை தோப்புக்கரணம் போட வைத்த விவகாரத்தில் நவநிர்மாண் சேனா கட்சியினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் உள்ள டாக்சி நிறுத்தத்தில் அண்மையில் சீருடை மற்றும் பேட்ஜ் அணியாமல் டாக்சி டிரைவர் ஒருவர் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நவநிர்மாண் சேனா கட்சியின் மூத்த தலைவர் நிதின் நந்த்காவ்கர் உள்பட 3 பேர் சேர்ந்து அவரை, தோப்புக்கரணம் போட வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பாதிக்கப்பட்ட டிரைவர் விமான நிலைய போலீசில் புகார் கொடுத்தார்.

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதின் நந்த்காவ்கர் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி அவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.


Next Story