தண்ணீர் வரும் வாய்க்காலை சீரமைக்க வேண்டும்


தண்ணீர் வரும் வாய்க்காலை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 9 March 2018 3:38 AM IST (Updated: 9 March 2018 3:38 AM IST)
t-max-icont-min-icon

எட்டிவயல் குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

போகலூர்,

பரமக்குடி தாலுகா போகலூர் யூனியன் எட்டிவயல் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குளம் உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் நிறைந்திருக்கும் போது பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் போதிய மழை இல்லாததால் தற்போது அந்த குளம் வறண்டு கிடக்கிறது.

மேலும் இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் வகையில் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் இருந்து வாய்க்கால் உள்ளது. ஆனால் அந்த வாய்க்கால் முழுவதும் செடிகளும் முட்புதர்களும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் கண்மாயில் இருந்து குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர வழியில்லாமல் உள்ளது.

எனவே இந்த வாய்க்காலில் உள்ள முட்புதர்களை அகற்றி சீரமைப்பதுடன் பெரிய கண்மாயில் இருந்து எட்டிவயல் குளத்துக்கு தண்ணீர் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story