தம்பதியினருக்கான சிறப்பு மருத்துவ முகாம்


தம்பதியினருக்கான சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 8 March 2018 11:22 PM GMT (Updated: 8 March 2018 11:22 PM GMT)

ஈரோடு மாருதி மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் மகளிர் தினத்தையொட்டி தம்பதியினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

ஈரோடு,

ஈரோடு பெருந்துறை ரோட்டில் மாருதி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை (எம்.எம்.சி.எச்.) உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மகளிர் தினத்தையொட்டி குழந்தை இல்லாத தம்பதியினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

முகாமுக்கு எம்.எம்.சி.எச். ஜெனிசிஸ் மலடு நீக்க மருத்துவத்துறை தலைமை மருத்துவ நிபுணர் டாக்டர் நிர்மலா சதாசிவம் தலைமை தாங்கினார். அவர் குழந்தை இல்லாத தம்பதினரை தனித்தனியாக சந்தித்து, அவர்களின் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார். டாக்டர் ஸ்ரீரேவதி சதாசிவம் வரவேற்றார்.

முகாமில் ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதியினர் கலந்து கொண்டனர். அவர்களிடம் இயற்கை மற்றும் செயற்கை முறையில் கருவாக்க சிகிச்சைகள் எவ்வாறு அளிக்கப்படுகிறது என்று டாக்டர் நிர்மலா சதாசிவம் விளக்கினார்.

இயற்கை முறையில் குழந்தை பேறு அடைய முடியாத தம்பதியினர் எந்த வயதினராக இருந்தாலும் அவர்களுக்கு என்று பிரத்தியேகமாக உள்ள சோதனைக்குழாய் குழந்தை சிகிச்சைகள் குறித்தும் எடுத்துக்கூறினார். 74 வயது ஆண், 64 வயது பெண் தம்பதியினருக்கு செயற்கை முறையில் குழந்தை பேறு அளித்தது குறித்தும் அவர் எடுத்து உரைத்தார்.

இந்த முகாமில் கலந்து கொண்டு புதிதாக பதிவு செய்த தம்பதியினருக்கு சிகிச்சை கட்டணம், பரிசோதனை கட்டணங்களில் சலுகையும் அறிவித்தார். அவர் கூறும்போது, ‘மகளிர் தினத்தின் போது, குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இலவச பரிசோதனை மற்றும் ஆலோசனையுடன், அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையும் அளித்து உள்ளோம்’ என்றார்.

முகாம் ஏற்பாடுகளை எம்.எம்.சி.எச். தலைவர் டாக்டர் எம்.என்.சதாசிவம் தலைமையில் கண்காணிப்பாளர் டாக்டர் ஏ.எஸ்.செந்தில்வேலு, எலும்பியல் துறை சிறப்பு நிபுணர் டாக்டர் டி.பிரேம்ராஜ் பிரபு, டாக்டர்கள் பூபதி, காளி கவுண்டன், டி.சி.ஞானசேகரன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Next Story