பணகுடி அருகே குளிக்கும் போது பெண்களை செல்போனில் படம் பிடித்த ஆசிரியர் சிறையில் அடைப்பு


பணகுடி அருகே குளிக்கும் போது பெண்களை செல்போனில் படம் பிடித்த ஆசிரியர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 10 March 2018 2:45 AM IST (Updated: 9 March 2018 8:47 PM IST)
t-max-icont-min-icon

பணகுடி அருகே குளிக்கும் போது பெண்களை செல்போனில் படம் பிடித்த ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பணகுடி,

பணகுடி அருகே குளிக்கும் போது பெண்களை செல்போனில் படம் பிடித்த ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அரசு பள்ளி ஆசிரியர்

நெல்லை மாவட்டம் பணகுடி பாத்திமா தெருவைச் சேர்ந்த ஜோசப் மகன் அந்தோணிசாமி (வயது 45). இவர், ரோஸ்மியாபுரத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கூடத்தில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் உள்ளனர். நரிப்பாறை கிராமத்தில் தெருக்குழாயில் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.

அந்த வழியாக வந்த அந்தோணிசாமி, அந்த பெண்களை செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், அந்தோணிசாமியை கண்டித்தாக தெரிகிறது.

சிறையில் அடைப்பு

அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ரமேஷ், பணகுடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தார்.

பின்னர் போலீசார், அந்தோணிசாமியை கைது செய்து வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

குளிக்கும் போது பெண்களை செல்போனில் படம் பிடித்ததாக அரசு பள்ளிக்கூட ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பணகுடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story