போலி ஆவணங்கள் மூலம் ரூ.22 லட்சம் கடன் வாங்கி மோசடி


போலி ஆவணங்கள் மூலம் ரூ.22 லட்சம் கடன் வாங்கி மோசடி
x
தினத்தந்தி 9 March 2018 10:15 PM GMT (Updated: 9 March 2018 6:19 PM GMT)

தனியார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.22 லட்சம் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக முதியவரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் தேரடி பகுதியில் வாகனங்கள் வாங்க கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் கடன் வாங்கிவிட்டு, அந்த பணத்தை திருப்பிச் செலுத்தாதவர்களிடம் இருந்து வாகனங்கள் பறிமுதல் செய்து ஏலம் விடப் படும்.

சென்னை தண்டையார்பேட்டை வினோபா நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 62). இவர், கடந்த 2012-ம் ஆண்டு அந்த நிதி நிறுவனத்தில் ரூ.22 லட்சம் கடன் பெற்றார். பின்னர் அந்த பணத்தில், அதே நிறுவனத்தில் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்ட 3 லாரிகளை வாங்கினார்.

ஆனால் அவர், கடனாக பெற்ற பணத்தை இதுவரை திருப்பிக்கொடுக்கவில்லை. இதையடுத்து அவர் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்தபோது, அது போலியானது என்பது தெரியவந்தது.

இதுபற்றி தனியார் நிறுவன மேலாளர் விவேகானந்தன், திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், போலி ஆவணங் களை கொடுத்து ரூ.22 லட்சம் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக முதியவர் ராமச்சந்திரனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story