பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை கலெக்டர் விஜயலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அரியலூர்,
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் சமுக நலம் மற்றும் சத்துணவு திட்டம், சென்னை பி.எச்.பி. மோட்டார்ஸ் கிளப் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் அரசு கலைக்கல்லூரியில் தொடங்கி, கல்லூரி சாலை, மார்க்கெட் தெரு, பஸ் நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது பெண்கள் பாதுகாப்பிற்கான இயற்றப்பட்ட சட்டங்களான குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், வரதட்சணை தடுப்பு சட்டம், குழந்தை திருமண தடுப்பு சட்டம், பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் ஆகிய சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்து கூறப்பட்டது. முன்னதாக கல்லூரியில் நடைபெற்ற வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், கருத்தரங்கில் சிறப்பாக கலந்துரையாடிய மாணவர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) லோகேஷ்வரி, சென்னையுவர் பி.எச்.பி. மோட்டார் கிளப் நிறுவனர் கவுசிக்மூர்த்தி, அரசுகலை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிற்றரசு மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story