பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது வினியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் இன்று (சனிக்கிழமை) நடைபெற வுள்ளது.
அதன்படி பெரம்பலூர் வட்டம் அலங்கிழி கிராமத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மனோ கரன் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம் நூத்தப்பூர் (தெற்கு) கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) விஜயலட்சுமி தலைமையிலும், குன்னம் வட்டம், துங்கபுரம் (வடக்கு) கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இருதயமேரி, தலைமையிலும், ஆலத்தூர் வட்டம் கொட்டரை கிராமத்தில் பொது வினியோகத்திட்ட துணைப்பதிவாளர் பாண்டித்துரை தலைமையிலும் இன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. மேற்படி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் தொடர்பான குறைகளை தெரிவித்து பயனடையலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story