கண்டமங்கலம் அருகே பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 9 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்
கண்டமங்கலம் அருகே பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 9 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள புதுக்குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த 67 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் நேற்று மதியம் வழக்கம்போல் மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. இவர்களுக்கு சத்துணவுடன் முட்டை மசால் வழங்கப்பட்டது. இதை வாங்கி மாணவ- மாணவிகள், பள்ளி வளாகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு மாணவனுக்கு வழங்கப்பட்ட முட்டை மசாலில் பல்லி விழுந்து கிடந்தது. இதை பார்த்ததும் அந்த மாணவன் அதிர்ச்சியடைந்தான். உடனே சத்துணவு ஊழியர்கள், மற்ற மாணவர்களுக்கு முட்டை மசால் வழங்குவதை நிறுத்தினர்.
இதனிடையே ஏற்கனவே முட்டை மசால் வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவ-மாணவிகளான சுப்ரியா (வயது 10), கோகுல் (6), கீர்த்திகா (8), மாதேஷ் (7), இனியன் (10), நெடுமாறன் (10), சந்தோஷ் (6), மணிகண்டன் (9), கவியரசன் (9) ஆகிய 9 பேருக்கு லேசான வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
உடனே ஆசிரியர்கள் விரைந்து சென்று ஆம்புலன்சை வரவழைத்து அந்த மாணவ-மாணவிகளை அருகில் உள்ள பி.எஸ்.பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் 9 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மாணவ- மாணவிகள் 9 பேரையும் உள்நோயாளிகளாக அனுமதித்து டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, தாசில்தார் சுந்தர்ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு திட்டம்) சீனுவாசன், கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதி ஆகியோர் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் மாணவ-மாணவிகளை பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

Related Tags :
Next Story