காவிரி மேலாண்மை வாரியம் குறித்த கலந்தாய்வு கூட்டம்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு


காவிரி மேலாண்மை வாரியம் குறித்த கலந்தாய்வு கூட்டம்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
x
தினத்தந்தி 10 March 2018 4:00 AM IST (Updated: 10 March 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவது குறித்து ஈரோட்டில் இன்று நடைபெற உள்ள விவசாயிகள் கலந்தாய்வு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்கிறார்.

பவானி,

சுப்ரீம் கோர்ட்டு 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என உத்தரவிட்டு உள்ளது. ஆனால் 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா? என்ற அச்சமும், அதிர்ச்சியும் ஏற்பட்டு உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்தப்பட்டால், தமிழகத்தின் உரிமை மறுக்கப்படுவதுடன், காவிரி நீருக்கு கையேந்தி நிற்கும் அவலநிலையும் ஏற்படும். இது மிகவும் கவலை அளிக்கிறது.

தமிழகத்தில் உள்ள விவசாய சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பல கோணங்களில் மத்திய அரசை வலியுறுத்துவது, அழுத்தம் கொடுப்பது போன்ற பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டி உள்ளது. எனவே இது தொடர்பாக ஆலோசிக்கவும், நமது உரிமைகளை நிலைநிறுத்தவும் அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள ஓயாசிஸ் ஓட்டலில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ், அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

Next Story