கோவை மாவட்டத்தில் அரசு திட்டங்கள் பொதுமக்களை விரைவில் சென்றடைய நடவடிக்கை, கலெக்டர் ஹரிகரன் பேட்டி
‘கோவை மாவட்டத்தில் அரசு திட்டங்கள் பொதுமக்களை விரைவில் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மாவட்ட கலெக்டர் ஹரிகரன் கூறினார்.
கோவை,
தமிழக மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் மாநாடு சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 5-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி முடிவடைந்தது. அதில் கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன் கலந்து கொண்டார். முதல்-அமைச்சர் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் அரசு திட்டங்கள் நடைமுறைப்படுத்துவது குறித்து கலெக்டர் ஹரிகரன் ‘தினத்தந்தி’ நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் நல திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கோவை மாவட்டம் முன்னோடியாக விளங்கி வருகிறது. பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை வெளிப்படையாகவும், திறமையாகவும் விரைவாகவும் அளித்து அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்த முதல்-அமைச்சர் அறிவுரை வழங்கி உள்ளார். அவை தீவிரமாக பின்பற்றப்படும்.
கோவை மாவட்டத்தில் ஏழை பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதி உதவியுடன் தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 832 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 8 லட்சம் நிதி உதவியும், ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பிலான 6.65 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. பட்டம் மற்றும் பட்டயம் படித்த ஏழை பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவியுடன் தலா 8 கிராம தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆயிரத்து 281 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 40 லட்சம் நிதி உதவியும், ரூ.2 கோடியே 77 லட்சம் மதிப்பிலான 10.24 கிலோ கிராம் தங்கமும் வழங்கப் பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி மாணவ-மாணவிகளுக்கு ரூ.21 கோடியே 64 லட்சத்து 4 ஆயிரத்து 800 மதிப்பில் 17 ஆயிரத்து 452 விலையில்லா மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளது. விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 293 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் 9 ஆயிரத்து 172 விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 769 பேருக்கு பாடநூல்கள், ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 887 பேருக்கு பாடக்குறிப்பேடுகள், 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் 32 ஆயிரத்து 269 பேருக்கு 2 லட்சத்து 33 ஆயிரத்து 906 விலையில்லா வண்ண சீருடைகள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கப்பட்டு உள்ளன.
இப்படி அரசு திட்டங்கள் பொது மக்களுக்கு விரைவில் சென்றடைய நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனையின் பேரில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் அரசு திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதற்கான இலக்கு எட்டப்படும்.
விவசாயத்துக்கான திட்டங்கள் பற்றி விவசாயிகள் முழுமையாக தெரிந்து கொள்வதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளின் கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. கட்டணமில்லா வண்டல் மண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு நீர்நிலைகளை சிறப்பாக பராமரித்ததற்காக தமிழகத்திலேயே கோவை மாவட்டம் 3-வது இடத்தை பிடித்து இருக்கிறது.
கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் ஏற்கனவே ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது கோடை வெயில் அதிகம் உள்ளதால் தேவையான இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் குறைகளை தீர்ப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்திலும் கோப்புகள் தேங்காதபடி உரிய நடவடிக்கை எடுத்து மக்கள் குறைகளை தீர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
கோவையில் புதிதாக மேம்பாலங்கள் அமைக்க முதல்-அமைச்சர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவை-திருச்சி சாலையில் சிங்காநல்லூர், ராமநாதபுரம், சுங்கம், மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா கோவில் சந்திப்பு, துடியலூர் சந்திப்பு, நரசிம்மநாயக்கன்பாளையம் சந்திப்பு, துடியலூர் சாலை சந்திப்பு, கோவை- திருச்சி சாலை எல் அண்டு டி சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் இருந்து மருதமலைக்கு எளிதாக செல்லும் வகையில் லாலி ரோடு அருகேயும் ஒரு பாலம் அமைக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் ஹரிகரன் கூறினார்.

Related Tags :
Next Story