எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தஞ்சாவூர்,
எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி, தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றிபெற்றதையடுத்து அங்கு இருந்த லெனின் சிலை உடைக்கப்பட்டது. இதேபோல் தமிழகத்தில் பெரியார் சிலையை உடைப்போம் என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்ததுடன் அவரது உருவபொம்மை எரிப்பு, ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி தலைமை தாங்கினார்.
அப்போது அவர்கள், திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலையை உடைத்ததற்கு கண்டனம் தெரிவித்ததோடு, அங்கு இயல்புநிலை திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் பெரியார் சிலையை உடைப்போம் என கூறிய எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் கிளை செயலாளர் முரளி, இந்திய மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர் பிடல் காஸ்ட்ரோ, துணைத்தலைவர் வீரையன், மாதவன் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று புதிய பஸ் நிலைய நுழைவு வாயிலில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Tags :
Next Story