காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மெத்தனம் மத்திய, மாநில அரசுகளுக்கு தி.மு.க. இளைஞர் அணி கண்டனம்
தி.மு.க. இளைஞர் அணி கண்டனம் தெரிவித்து ஆய்வுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
கரூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மெத்தனம் காட்டுவதாக மத்திய, மாநில அரசுகளுக்கு தி.மு.க. இளைஞர் அணி கண்டனம் தெரிவித்து ஆய்வுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
கரூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு இளைஞர் அணி மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெள்ளக்கோவில் சாமிநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி உள்பட மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய, மாநில அரசின் மெத்தன போக்கிற்கும், மேலாண்மை வாரியம் அமைக்காததற்கும் கண்டனம் தெரிவித்தல்.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சங்கிலி பறிப்பு, பாலியல் வன்முறை, போலீசாரின் அத்துமீறல்கள், பொதுமக்கள் கூட்டத்தில் தடியடி, கைது போன்ற நடவடிக்கை ஜனநாயகத்தை கேள்விக்குறியாக மாற்றி விட்டது. எதையும் கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தல். பெரியார், அண்ணா சிலைகளை சேதப்படுத்துவதை தி.மு.க. இளைஞர் அணி எதிர்கொள்ளும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அன்பரசன் வரவேற்று பேசினார். முடிவில் துணை அமைப்பாளர் சசிக்குமார் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story