ஜனதா தளம்(எஸ்) சார்பில் 5-வது வேட்பாளர் நிறுத்தப்பட்டதால் போட்டி உறுதி
ஜனதாதளம் (எஸ்) சார்பில் டெல்லி மேல்-சபை தேர்தலில் போட்டியிடும் பாரூக் நேற்று சட்டசபை செயலாளர் மூர்த்தியிடம் வேட்பு மனு தாக்கல் செய்த காட்சி. அருகில் அக்கட்சியின் மேல்-சபை உறுப்பினர் டி.ஏ.ஷரவணா உள்பட பலர் உள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு 4 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க வருகிற 23-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் சார்பில் 3 பேரும், பா.ஜனதா சார்பில் ஒருவரும் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ள நிலையில் 5-வது வேட்பாளரை ஜனதா தளம்(எஸ்) களம் இறக்கி இருப்பதால் போட்டி உறுதியாகி உள்ளது. அதோடு குதிரைபேரத்துக்கும் வாய்ப்பு உருவாகி இருப்பதாக கருதப்படுகிறது.
கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்-சபையில் எம்.பி.க்களாக உள்ள 4 பேர்களின் பதவி காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதியுடன் நிறைவடைகிறது. அதாவது டெல்லி மேல்-சபையில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் ரகுமான்கான், ராஜீவ் சந்திரசேகர், ராமகிருஷ்ணா, பசவராஜ் கவுடா பட்டீல் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த 4 இடங்களுக்கான தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பாரூக் நேற்று மனு தாக்கல் செய்தார்.
நேற்று பெங்களூரு விதான சவுதாவுக்கு வந்த அவர் சட்டசபை செயலாளர் மூர்த்தியை நேரில் சந்தித்து மனுவை தாக்கல் செய்தார். அப்போது டி.ஏ.ஷரவணா எம்.எல்.சி. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். மனுவில் வழிமொழிபவர்களின் பட்டியலில் குமாரசாமி உள்பட 10 எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்து இடம் பெற்றுள்ளது. கர்நாடக சட்டசபையில் உள்ள பலத்தின் அடிப்படையில் பார்த்தால் ஆளும் காங்கிரசுக்கு 3 இடங்களும், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதாவுக்கு ஒரு எம்.பி. பதவியும் கிடைப்பது உறுதியாகும்.
ஆயினும் வெற்றி பெற தேவையான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தங்களது கட்சி வேட்பாளரை ஆதரிக்குமாறு காங்கிரசிடம் தேவேகவுடா வேண்டுகோள் விடுத்தார். அதை சித்தராமையா ஏற்கனவே நிராகரித்துவிட்டார்.
களத்தில் 4 வேட்பாளர்கள் மட்டுமே இருந்தால் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்படுவார்கள். 4-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் இருந்தால் ஓட்டுப்பதிவு நடைபெறும். ஆளும் காங்கிரஸ் சார்பில் 3 பேரும், பா.ஜனதா சார்பில் ஒருவரும் மனு தாக்கல் செய்ய உள்ளதால், வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 ஆக உயரும். இதனால் ஓட்டுப்பதிவு நடைபெறும்.
எனவே குதிரை பேரம் நடைபெற வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். கடந்த முறை கர்நாடகத்தில் டெல்லி மேல்-சபைக்கு தேர்தல் நடைபெற்றபோது, குதிரை பேரம் நடைபெற்றது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story