வியாழனின் துணைக் கிரகத்தில் உயிரினங்கள்?
வியாழன் கிரகத்தின் துணைக் கிரகத்தில் உயிரினங்கள் இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
வியாழன் கிரகத்தின் துணைக் கிரகமான யூரோப்பா, முழுவதும் ஐஸ்கட்டியால் ஆனது. இங்கு உயிரினங்கள் வாழ முடியும் என்ற விவரம் சமீபத்தில் வெளியாகியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரேசில் நாட்டின் சாவோ பாலோ பல்கலைக்கழக நிபுணர்கள் சமீபத்தில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், யூரோப்பா பற்றி சேகரிக்கப்பட்ட தகவல்கள் பூமியுடன் ஒத்துப்போவதை கண்டறிந்தனர்.
தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் அருகே உள்ள போங்யங் தங்கச் சுரங்கத்தின் 2.8 கி.மீ. ஆழத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. சூரிய ஒளிபடாத அங்கு தண்ணீரில் பாக்டீரியாக்கள் உயிர் வாழ்வதும், கதிரியக்கங்கள் ஏற்படுவதும் தெரியவந்தது.
அதேபோன்ற நிலை யூரோப்பா துணைக் கிரகத்தின் நிலப்பரப்பிலும் உள்ளது. அங்குள்ள நிலமேற்பரப்பில் ஐஸ் படுகையின் 10 கி.மீ. ஆழத்தில் கடல் போன்ற தண்ணீர் மறைந்துள்ளது. அதில் உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்கலாம் என பிரேசில் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எதிர்காலத்தில் யூரோப்பாவில் வசிப்பதற்கு இப்போதே ‘துண்டு’ போட்டுவிடலாமா?
Related Tags :
Next Story