சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால் வணிகர்களை திரட்டி போராடுவோம் ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி


சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால் வணிகர்களை திரட்டி போராடுவோம் ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி
x
தினத்தந்தி 11 March 2018 2:30 AM IST (Updated: 10 March 2018 6:38 PM IST)
t-max-icont-min-icon

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால் வணிகர்களை திரட்டி போராடுவோம் என்று ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.

கோவில்பட்டி,

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால் வணிகர்களை திரட்டி போராடுவோம் என்று ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.

ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில சங்கம் சார்பில், வருகிற மே மாதம் 5–ந்தேதி சென்னையில் 35–வது மாநில மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் வணிகர்கள் கலந்து கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம், கோவில்பட்டி சங்க அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாநில துணை தலைவர் ராஜா, மாநில இணை செயலாளர் வெங்கடேசுவரன், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில், மே 5–ந்தேதி சென்னையில் நடக்கும் வணிகர் சங்க மாநில மாநாட்டில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் வணிகர்கள் அனைவரும் ஒருநாள் கடைகளை அடைத்து, குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும். பேரமைப்புக்கு சந்தா வசூல் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அன்னிய முதலீடு

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. ஆனால் அவ்வாறு அனுமதிக்க முற்பட்டால் வணிகர்களை திரட்டி போராடுவோம். திருச்சியில் போலீசாரால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அனைவரது மனதையும் வருத்தம் அடைய செய்துள்ளது. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிப்பதில் கவனம் செலுத்தும் காவல்துறை திருடர்களை பிடிப்பதிலும், திருடு போன பொருட்களை மீட்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

வீட்டு வரி விகிதம் முறைப்படுத்தப்படாமல், கணக்கீடு செய்யப்படாமல் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான சட்ட விதிமுறைகள் அதிகாரிகளுக்கு தெரியவில்லை. இதனை முறைப்படுத்த வருகிற 12–ந்தேதி அமைச்சர்களை சந்திக்க உள்ளோம். அதன்பிறகு நடவடிக்கை இல்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story