சீருடை பணியாளர் எழுத்து தேர்வுக்கான மையங்களில் ஐ.ஜி. ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று சீருடை பணியாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து போலீஸ் ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
விழுப்புரம்,
தமிழகத்தில் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறை காவலர், தீயணைப்போர் பதவிகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 140 பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 8 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 18 ஆயிரத்து 750 பேர் எழுத உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று போலீஸ் ஐ.ஜி. கணேசமூர்த்தி, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களுக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக தேர்வு மையத்தில் குடிநீர், கழிவறை வசதி மற்றும் காற்றோட்டமான வசதி, தடையில்லா மின்சார வசதி ஆகியவை செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என்று பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story