ராஜபாளையம் பஸ் நிலைய பகுதியில் விரைவில் இணைப்பு சாலை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தகவல்


ராஜபாளையம் பஸ் நிலைய பகுதியில் விரைவில் இணைப்பு சாலை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தகவல்
x
தினத்தந்தி 11 March 2018 2:30 AM IST (Updated: 11 March 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் பஸ் நிலைய பகுதியில் விரைவில் இணைப்பு சாலை அமைக்கப்படும் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

ராஜபாளையம்,

சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கூடுதல் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சனை ராஜபாளையம் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.சந்தித்து நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது எனவும் நெரிசலை தவிர்க்க புதிய பஸ் நிலையத்திலிருந்து தென்காசி ரோட்டில் இணைப்பச் சாலை அமைக்க வேண்டும் எனவும் மனு அளித்திருந்தார். இதனை தொடர்ந்து ஆய்வு செய்து இணைப்பு சாலை அமைக்க ரூ. 18 கோடி செலவில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் ஆகவே விரைவில் இணைப்பு சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தங்கப்பாண்டியன் தெரிவித்தார். அப்போது உதவி கோட்ட பொறியாளர் முத்தீஸ்வரன், நகர தி.மு.க. செயலாளர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story